வெயில் காலத்தில், எளிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கக்கூடிய பழமாக இருக்கிறது, தர்பூசணி.
இது, பலருக்கும் பிடித்த பழமாக இருக்கிறது. இந்த பழத்தை சாப்பிடும் போது, தெரியாமல் விதையை சாப்பிட்டு விட்டால் குழந்தைகள், வயிற்றில் மரம் வளரும் என்று நினைப்பர்.
தர்பூசணி விதை:
வெளியில் பச்சை, உள்ளே சிவப்பு, இதில் கருப்பு நிற விதைகள் இருக்கும் பழம்தான் தர்பூசணி. இந்த பழத்தை சாப்பிட்டால், அவ்வளவு எளிதில் யாருக்கும் நீர்ச்சத்து குறைந்து விடாது. நாம், சுவையான தர்பூசணியை சாப்பிடும் போது நம்மையே அறியாமல் இரண்டு மூன்று விதைகளை மென்று விடுவோம். சிறு வயதில் இதை சாப்பிட்டு விட்டோம் என நாம் யாரிடமாவது கூறினால், “ஐயோ..அத சாப்பிட்டியா? மரம் வளரப்போவுது போ..” என நம்மை யாராவது பயமுறுத்தி இருப்பர். இதை நினைத்து, நாம் குழந்தையாக இருக்கும் போது பயந்திருப்போம். ஆனால், கொஞ்சம் நாம் வளர்ந்த பிறகுதான் தெரியும், அது வெறும் கட்டுக்கதை என்று. சரி, இந்த தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் அப்படி என்னதான் ஆகிவிடும்? இதற்கான விடையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
என்ன ஆகும்?
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால், மரம் வளர்வது போல அப்படி நமக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இருப்பினும் ஒரு சில உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். இது நமக்கு புரதம் கொடுக்கும். அதே போல, மாக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஹெல்தியான கொழுப்பை உடலுக்கு அளிக்கும். தர்பூசணி விதைகளை அதிகமாக சாப்பிட்டால்தான் பிரச்சனை வரும். அதாவது, அதிக விதைகளை மெல்லாமல் விழுங்கும் போது அது வயிறு உப்பசத்தை ஏற்படுத்தலாம். இதனால், வயிறு மந்தமாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும்.
இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
சொல்லப்போனால், தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு பலவித நன்மைகள்தான் ஏற்படும். இதில் இருக்கும் புரதம் மற்றும் மக்னீசிய சத்துகள் உங்களுக்கு தேவையான பல்வேறு ஆற்றல்களை வழங்கும்.
இதய ஆரோக்கியம்:
தர்பூசணி விதையில் இருக்கும் மக்னீசிய சத்துகள் உங்கள் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவை குறைத்து, ஆரோக்கிய கொழுப்பை வளர்க்கும். கூடவே, கெட்ட கொழுப்பையும் குறைக்கும்.
ஆண்டிஆக்சிடண்ட்ஸ்:
தர்பூசணி விதையில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ், உங்கள் வயிறு வீங்குதலை தடுக்கிறது.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்:
தர்பூசணி விதைகளில் அமைனோ ஆசிட் இருக்கிறது. இது, ஹெல்தியான மெட்டபாலிசத்தை உடலில் வளர்ப்பதோடு, உங்கள் உடலுக்கு நல்ல புரதம் வழங்கும் ஆதரவாகவும் இருக்கிறது.
எப்படி சாப்பிடுவது?
தர்பூசணி பழ விதைகளை மென்று சாப்பிடலாம். இதனால், உங்கள் உடலை நீங்கள் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள தயார் படுத்துகின்றனர்.
வறுத்து சாப்பிடலாம்:
தர்பூசணி விதைகளை வறுத்து, ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம். இது, கிட்டத்தட்ட பூசணி விதைகள் போலத்தான் இருக்கும்.
முளை கட்டுதல்:
தர்பூசணி விதைகளை முளைக்கட்டியும் சாப்பிடலாம். இது, உங்கள் நாக்கில் டேஸ்ட்டையும் வேறுமாதிரியாக காண்பிக்கும்.
இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.




