நோய் எதிர்ப்பு சக்தி தரும் பீட்ரூட் – கேரட் சூப்..!!

Oplus_131072

 

தேவையான பொருட்கள் :

கேரட் – கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது.
வெங்காயம் – 2
பீட்ரூட் – 2
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 5 பல்
காய்கறி சத்து நீர் – 7 கப்
உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், இஞ்சி சேர்த்து பின்னர் பீட்ரூட் துண்டுகளும் சேர்த்து 5 நிமிடங்கள் மிக மிதமான சூட்டில் வதக்கவும்.

இதனுடன் காய்கறி சத்து நீர் சேர்த்து மிக மிக நிதானமான சூட்டில் 25 – 45 நிமிடங்கள் பாத்திரத்தினை மூடி கொதிக்க விடவும்.

இதனை ஆற விட்டு மிக்சியில் நன்கு அரைத்து மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிது நேரம் கொதிக்க விட்டு மிளகு தூள், உப்பு சேர்த்து பருகவும்.

சத்தான சுவையான பீட்ரூட் – கேரட் சூப் ரெடி.

Read Previous

அதிகப்படியான கொழுப்பை குறைக்கும் கொள்ளு ரசம்..!!

Read Next

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் தனக்குத்தானே மற்றும் பிற உறுப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளும் கால நேரங்கள் செயல்களை பற்றி தெரிந்து கொள்வோம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular