சாதாரண நமஸ்காரம் செய்வதால் இத்தனை நன்மைகள் உள்ளதா..!!

 

நம் நாடு நீண்ட காலம் அன்னியர்கள் ஆதிக்கத்தில் இருந்த பொழுது அவர்களின் சில பழக்கங்கள் நம்மிடம் புரையோடிவிட்டது. அவற்றில் “குட் மார்னிங்”, “குட் ஆப்டர்நூன்”, “குட் ஈவ்னிங்”, “குட் நைட்” என உள்ளன்பு இல்லாமல் வெறும் வாய்வார்த்தையாக கூறுவதும், ஆண் – பெண் பேதமின்றி பிறருடன் கைகுலுக்கும் பழக்கங்களும்.*

*ஆனால் இந்த பழக்கங்களுக்கு முன்பாக சக மனிதர்களையும் தெய்வத்தின் பிம்பமாகக் கருதி இரு கைகளையும் கூப்பி வணங்கும் “நமஸ்காரம்” எனப்படும் வணக்கம் செய்யும் முறையையே பின்பற்றி வந்தனர் நமது முன்னோர்கள்.*

*அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் நமக்கு நன்மைகளை அளிக்கும் இந்த “நமஸ்காரம்” வணக்க முறை எப்படி செய்ய வேண்டும்? எங்கு செய்ய வேண்டும்? என்பது குறித்து இங்கு விரிவாக தெரிந்து கொள்ளலாம்.*

*நமது வலது மற்றும் இடது கைகளை கூப்பி வணக்கம் செய்வதை பரதநாட்டியம் எனப்படும் நடனக்கலையில் “அஞ்சலி முத்திரை” என கூறுவர்*

*இப்படி இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்யும்பொழுது நம் தலைக்குள்ளாக இருக்கும் இடது புறம் மற்றும் வலது புற மூளையின் செயல் திறன் சமசீர் அடைவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.*

*கைகளை கூப்பி நமஸ்காரம் செய்வதால் கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தியால் நமது உடலில் மின்னோட்டம் ஏற்பட்டு, ஆற்றல் வாய்ந்த அதிர்வலைகள் வெளிப்பட்டு பிற மனிதர்களின் தீய அதிர்வலைகள் நம்மை தாக்காத வண்ணம் காக்கிறது.*

*எனவே தெய்வங்களை வணங்கும் பொழுதும், பிற மனிதர்களை வணங்கும் பொழுதும் இரு கைகளை கூப்பி வணக்கம் செய்யும் முறையை நாம் பின்பற்றுவது சாலச் சிறந்தது.*
*“அஷ்டாங்கணம்”‘ என்பது நம் உடலின் எட்டு அங்கங்களான கால் விரல், மூட்டு, வயிறு, மார்பு, கைகள், தாடை மூக்கு, நெற்றி ஆகிய அனைத்தும் தரையை தொடும் படி இறைவனையும், இறை சந்நிதானத்தில் இருக்கின்ற மற்ற தெய்வங்களையும் வழிபடும் முறையாகும்.*

*உடலில் ஆறு அங்கங்களான கால் விரல், கால் மூட்டுகள், கைகள், தாடை, மூக்கு, நெற்றி ஆகியவை தரையை தொடும் வகையில் தெய்வங்களையும், யோகக்கலையில் சூரியனையும் வழிபடும் முறை “ஷாஷ்டாங்கம்” நமஸ்கார முறையாகும்.*

*உடலின் ஐந்து அங்கங்களான கால் விரல், கால் மூட்டுக்கள், மூட்டுக்கள், கைகள், நெற்றி எனும் 5 அங்கங்கள் தரையை தொடும் படி இறைவனை வணங்குவது “பஞ்சாங்கம்” நமஸ்கார முறையாகும்.*

*நாம் இரண்டு கைகளை கூப்பி நமஸ்காரம் செய்து வணங்கும் முறையிலும் சில விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.*

*காலையில் உதிக்கின்ற சூரியனையும், கோயில்களில் தெய்வங்களுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் செய்யும்போதும் அந்த இறைவனே நமக்கு எல்லாம் என்கிற “சரணாகதி” தத்துவத்தின் அடிப்படையில் இரண்டு கைகளையும் தலைக்கு மேலாக கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.*

*நெற்றிக்கு நேராக இருகரங்களையும் கூப்பி மரியாதைக்குரிய நபர்களையும், சக மனிதர்களையும் நமஸ்காரம் செய்ய வேண்டும்.*

*மதியவேளை சூரியனையும், உயர்ந்த மனிதர்களையும், மகான்கள், சித்த புருஷர்கள் போன்றவர்களையும் நெஞ்சுக்கு நேராக இருகரங்களையும் கூப்பி, சிரம் தாழ்ந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். நம்மை பெற்றெடுத்த தாயையும், அஸ்தமன சூரியனையும் நமது வயிற்றுக்கு நேராக இருகரங்களையும் கூப்பி நமஸ்காரம் செய்து வழிபட வேண்டும்.*

*பெற்றெடுத்த தாய், தந்தையர், குரு, சித்த புருஷர்கள், சான்றோர்கள், தெய்வம் ஆகியோர்களின் இரண்டு கால்களையும் நம் இரு கரங்களால் தொட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இப்படி கால்களை தொட்டு வணங்கும் முறை “சரணஸ்பர்ஷம்” எனப்படும்.*

*வயதில் பெரியவர்கள் என்றாலும் மரியாதை என்கிற பெயரில் நீங்கள் பார்க்கின்ற எல்லோரின் கால்களையும், எல்லா நேரங்களிலும் தொட்டு வணங்கக் கூடாது. மேற்சொன்ன முதல் மூன்று நமஸ்கார முறைகளில் தெய்வங்களை மட்டுமே வழிபட வேண்டும்.*

*அஷ்டாங்கம் மற்றும் ஷாஷ்டாங்கம் நமஸ்கார முறைகள் ஆண்களுக்குரிய நமஸ்கார முறைகளாகும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்கார முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும்.*

காரணம் மனிதர்களுக்கு உயிரை தரக்கூடிய தாய்பால் சுரக்கின்ற பெண்களின் புனிதமான மார்பக பகுதி பூமியை தொடக் கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு பஞ்சாங்க நமஸ்காரம் முறை வலியுறுத்தப்படுகின்றது.

 

Read Previous

உடல் சோர்வாக இருக்கிறதா..?? அப்ப இதுதான் உங்க பிரச்சனை… இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

Read Next

அருகம்புல் சாறில் உள்ள அற்புத நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular