Oplus_131072
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் (மொறுமொறுப்பிற்கு)
வெல்லம் – 3/4 கப்
கனிந்த வாழைப்பழம் – 1 (சிறியது)
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் துண்டுகள் அல்லது துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
ஆப்ப சோடா – ஒரு சிட்டிகை (விருப்பமென்றால்)
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கி கரைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, ஏலக்காய் தூள் மற்றும் மசித்த வாழைப்பழத்தைச் சேர்க்கவும்.
அதில் வெல்லக் கரைசலை ஊற்றி, தேங்காய் துருவல் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும். மாவு இட்லி மாவு பதத்தை விட சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, ஒரு குழிக்கரண்டியால் மாவை எடுத்து மெதுவாக ஊற்றவும்.
அப்பம் எழும்பி வந்தவுடன் திருப்பிப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வேகவைத்து எடுக்கவும்…..




