Oplus_131072
எப்படிப்பட்ட மருவும் உதிரும்…
கழுத்து, முகம், மற்றும் நெஞ்சு பகுதியில் மரு இருந்துக் கொண்டு உங்களை ரொம்ப பாடாய்ப்படுத்துகிறதா? கவலை வேண்டாம் சிறப்பு டிப்ஸ் இதோ..
உங்களுக்கு அம்மான் பச்சரிசி மூலிகை கிடைத்தால் அந்த செடியின் காம்பை உடைத்தால் பால் போல வெண்மையான திரவம் வரும். அதனை மருவின் மேல் தடவினால் நான்கு நாட்களில் மரு உதிர்ந்து விடும். உங்களுக்கு இந்த மூலிகை கிடைக்காமல் போனாலும் கவலை வேண்டாம். உங்கள் ஊர் நாட்டு மருந்து கடையில் அம்மான் பச்சரிசி இலை பவுடர் கிடைக்கும். அருகில் உள்ள மருந்து கடையில் வைட்டமின் E கேப்ஸ்யூல் வாங்கி வந்து உள்ளங்கையில் சிறிது பவுடருடன் இரண்டு வைட்டமின் இ கேப்ஸ்யூலில் உள்ள திரவத்தை நன்றாக கலந்து மரு உள்ள இடங்களில் தடவி வந்தால் மூன்றே நாளில் மரு கொட்டி விடும். இது நன்றாக வேலை செய்கிறது…




