கண்களைக் கசக்கியதும் சில நொடிகள் நட்சத்திரங்கள் மின்னுவது போல் உணர்ந்திருக்கிறீர்களா..?? ஏன் தெரியுமா..??

Oplus_131072

கண்களை கசக்கியதும் சில வினாடிகள் கண்களின் முன் நட்சத்திரங்கள் மின்னுவது போல் அல்லது ஏதோ ஒன்று ஓடுவதுபோலும் உணர்ந்திருந்தால் அதற்கு பாஸ்பீன்கள் என்று பெயர்.
இந்த பாஸ்பீன்கள் கிரேக்கர்கள் காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது ஏன் தோன்றுகிறது ?

நம் கண்களை கசக்கும்போது கண்ணின் கருவிழியில் அழுத்தம் உண்டாகிறது. இந்த அழுத்தத்தால் ரெட்டினாவில் உள்ள கேங்க்லியன் செல்கள் (ganglion cells) ஆற்றல் பெற்று மின்னுகின்றன. இந்த மாறுபாட்டை சட்டென உணர்ந்துகொள்ளாத மூளை இந்த ஆற்றலுக்கு ஒத்துழைக்க்கிறது. இதனாலேயே அதை நீங்களும் காண்கிறீர்கள்; உணர்கிறீர்கள்.

இந்த பாஸ்பீன்கள் வெவ்வேறு வண்ணங்கள், வெவ்வேறு வடிவங்களில் கூட தோன்றும். இந்த செல்கள் வேகமாக நகரும்போது அதன் வடிவம் மாறுபடுகிறது. அடுத்த முறைக் கண்களைக் கசக்கும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

அதேபோல் கண்களைக் கசக்கும்போது மெதுவாக , மென்மையாகக் கசக்குங்கள். வேகமாக கசக்குவது கண்களை துன்புறுத்துவதாக இருக்கும்.

Read Previous

இத்தனை மருத்துவ நன்மைகளை கொண்டதா செம்பருத்தி பூ..!!

Read Next

உடலை இரும்பாக்கும் எள்ளுப் பொடி சாதம்..!! – ஆரோக்கியமான எள்ளுப் பொடி சாதம் செய்யும் ரகசியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular