பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனது ‘We the leaders’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். அதில் பலரும் தங்களை இணைத்து வருகின்றனர். மேலும், பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் கைக்கோர்த்துள்ளனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் அண்ணாமலையுடன் கைகோர்க்க உள்ளார் என்ற தகவல்கள் உலா வருகின்றன. அவர் விஜய்யின் தவெக கட்சியில் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில், இத்தகவல் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




