ரூ.9 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.5,550 வருமானம்! போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

 

 

தபால் நிலையத்தின் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) மூலம் ஒருமுறை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானத்தைப் பெறும் வசதி உள்ளது.

 

தற்போது இந்தத் திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4% வட்டி வழங்கப்படுகிறது. தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முழுத் தொகையையும் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ.66,600 வட்டி கிடைக்கும். இதன்படி மாதந்தோறும் சுமார் ரூ.5,550 வட்டி வருமானமாக பெறலாம்.

 

இந்தத் திட்டத்தின் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள். கூட்டு கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.

 

முதலீடு செய்வதற்கு முன் தற்போதைய வட்டி விகிதம், விதிமுறைகள் மற்றும் வரி தொடர்பான விவரங்களை அருகிலுள்ள தபால் நிலையத்தில் உறுதி செய்துகொள்வது நல்லது.

Read Previous

அதிமுகவில் இருந்து அப்சரா விலகல்! தவெகவில் இணையப் போகிறாரா?

Read Next

கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular