பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் தேவையின்றி ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்றும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைமை ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மற்றும் சிவகாசி பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்களில் தவெக நிர்வாகி விக்னேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி செயல்பட்டதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ நடவடிக்கை அல்லது அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.




