மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நாளை (ஜூன் 11) அவரது சொந்த ஊரான தேனியில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள இல்லத்தில் இருந்து இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் உடல் தேனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. தொடர்ந்து நாளை பிற்பகல் வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்படும். பின்னர் முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.




