நீட் தேர்வை மாநிலங்களை நம்பி ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் தொடர் போராட்டங்கள் ஒன்றிய அரசு விழித்துக்கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்தில் அது முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய அவர், பள்ளிக் கல்வியை மையமாகக் கொண்டிருந்த கற்றல் முறையை கோச்சிங் சென்டர்களை சார்ந்ததாக மாற்றிவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.




