2025-26 நிதியாண்டுக்கான வருமான வரி (Income Tax Return – ITR) தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். இதுவரை சுமார் 4.7 கோடி பேர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
கடைசி நாளில் அதிகளவில் விண்ணப்பங்கள் வரக்கூடும் என்பதால், கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை கடைசி நாளுக்குள் வருமான வரியை தாக்கல் செய்வதே பாதுகாப்பானது.
ITR தாக்கல் செய்ய தேவையான ஆவணங்கள்:
• PAN மற்றும் ஆதார் அட்டை
• Form 16 அல்லது சம்பள விவரங்கள்
• Form 26AS மற்றும் AIS (Annual Information Statement)
• வங்கி கணக்கு விவரங்கள்
• சேமிப்பு, காப்பீடு உள்ளிட்ட முதலீட்டுச் சான்றுகள்
கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, தேவையான ஆவணங்களுடன் உடனடியாக வருமான வரி தாக்கல் செய்யுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.




