தமிழகத்தில் தொடங்கி உலகின் முன்னணி வாட்ச் நிறுவனமாக உயர்ந்த டைட்டன்..!!

 

 

1984-ஆம் ஆண்டு டாடா குழுமமும், தமிழக அரசின் டிட்கோ (TIDCO) நிறுவனமும் இணைந்து ஓசூரில் தொடங்கிய டைட்டன், இன்று உலகின் 5-வது மிகப்பெரிய வாட்ச் நிறுவனமாக வளர்ந்து சாதனை படைத்துள்ளது.

 

1970 மற்றும் 1980-களில் உலகத் தரத்திலான குவார்ட்ஸ் தொழில்நுட்பக் கடிகாரங்களை இந்தியாவில் தயாரிக்கும் நோக்கில் இந்த கூட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் தொலைநோக்கு பார்வையும், டாடா குழுமத்தின் தொழில்துறை அனுபவமும் இணைந்ததே டைட்டனின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 

தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை சிறப்பிக்கும் வகையில் ‘டைட்டன் தமிழ்நாடு’ என்ற சிறப்பு பதிப்புகளையும் அறிமுகப்படுத்தி, தமிழ் மண்ணுக்கான தனது மரியாதையை டைட்டன் வெளிப்படுத்தியுள்ளது. இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நிறுவனங்களில் ஒன்றாக டைட்டன் திகழ்கிறது.

Read Previous

வருமான வரி தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. தேவையான ஆவணங்களை உடனே தயாராக வைத்துக் கொள்ளுங்கள்..!!

Read Next

இன்ஸ்டாகிராம் நட்பு விபரீதம்… 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 22 வயது இளைஞர் போக்சோவில் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular