தூய்மைப் பணியாளர்களின் உணவு விவகாரம்.. அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்..!!

 

 

தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஆவடியில் மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி இருந்ததாகவும், அந்த உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்தச் சம்பவம் பொதுச் சேவையில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் நலனில் அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், விஜய் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், உணவு தயாரிப்பு, தரப் பரிசோதனை மற்றும் விநியோக முறைகளில் கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

சபரிமலை கலப்பட நெய் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..!!

Read Next

போராட்டம் மீண்டும் வெடிக்குமா?.. FIR-களை வாபஸ் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் என CJP எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular