மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, தேங்காய் குடோனில் வேலை செய்து வந்த 23 வயதான சஞ்சய் குமார் என்பவர், பட்டப்பகலில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலை நடைபெற்று கொண்டிருந்த இடத்திற்குள் புகுந்த மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று உடலை மீட்டு, விசாரணையை தொடங்கினர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




