டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

 

 

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் தொடர்புடைய வழக்கில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 6 மாதங்களாக என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றி வருகிறேன். இனி அவனது வாழ்நாள் முழுவதும் எதிர்கால நலன், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக முழுப் பொறுப்புடன் துணை நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த அறிக்கை சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் பலரது கவனம் திரும்பியுள்ளது.

Read Previous

சிறுநீர் பாதை தொற்று (UTI) அறிகுறிகள் என்ன?.. வராமல் தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்..!!

Read Next

உடலில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா?.. சிறுநீரக பிரச்சினையின் எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular