பிரபல போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்சை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர்ச்சுகலின் காஸ்காய்ஸ் கடற்கரை நகரில் நடைபெற்ற இந்த திருமணம், நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்த இருவரும், தங்களது 5 குழந்தைகள் முன்னிலையில் மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட கால காதலுக்கு பிறகு திருமணம் செய்துகொண்ட ரொனால்டோ – ஜார்ஜினா ஜோடிக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




