“ஜந்தர்-மந்தர் சீசன் 2” விரைவில் தொடங்கும்? பரபரப்பை கிளப்பிய CJP நிறுவனர்!

 

 

இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஜந்தர்-மந்தர் சீசன் 2” போராட்டம் விரைவில் தொடங்கும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஜந்தர்-மந்தர் சீசன் 2 எப்போது தொடங்கும்?” என பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதை குறிப்பிட்ட அவர், அதற்கான பதிலாக போராட்டம் மிக விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக நீட் தேர்வு விவகாரத்தை மையமாகக் கொண்டு CJP தலைமையில் நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததாக கட்சி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், “சீசன் 2” குறித்த அறிவிப்பு அரசியல் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

திமுக எம்.எல்.ஏ.க்கள் பேச்சால் அதிருப்தியா? உதயநிதிக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சந்தேகம்!

Read Next

கோவையில் பைக்கில் இருந்த ஹெல்மெட்டை திருடிய இளம்பெண்! வைரலாகும் சிசிடிவி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular