Oplus_16908288
கோவை மாவட்டத்தில் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை இளம்பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஆணுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அந்தப் பெண், சிறிது நேரத்தில் சாதாரணமாக நடந்து சென்று வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டை எடுத்துள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து சென்று, உடன் வந்த நபருடன் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.




