இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ! 1.07 லட்சம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்!

 

 

இந்தோனேசியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் 1,07,000 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. தீயின் தாக்கம் காரணமாக சில பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 

காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர 50,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 43 ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 விமானங்களின் உதவியுடன் செயற்கை மழை பெய்யச் செய்து தீயை அணைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதற்கிடையே, வரும் மாதங்களில் வறட்சியின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பரவும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

உலக யானைகள் தினம்: “ஆசிய யானைகளின் தாயகம் இந்தியா” – பிரதமர் மோடி பெருமிதம்!

Read Next

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு! வாஷிங்டன் சுந்தர் விலகும் அபாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular