அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அப்சரா, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மனதில் கனத்த உணர்வுடன் அதிமுகவில் இருந்து விலகுகிறேன். இந்த முடிவு எந்தவித கசப்புணர்வாலும், தனிப்பட்ட வருத்தத்தாலும் எடுக்கப்படவில்லை. எனது அரசியல் பயணம் இனி வேறு பாதையில் செல்லலாம்; ஆனால் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கம் என்றும் மாறாது” என அப்சரா குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அப்சரா தவெகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும், அவர் தவெகவில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.




