புதிய செல்போன் திடீர் வெடிப்பு: இளைஞருக்கு பலத்த தீக்காயம்!

 

 

உத்தரப் பிரதேசத்தின் பிபால்கா கிராமத்தைச் சேர்ந்த மஜித் என்பவர் புதிதாக வாங்கிய செல்போன் எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வலியால் அவர் அலறித் துடித்த நிலையில், சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிய செல்போன் பயன்படுத்திய சில நாட்களிலேயே வெடித்ததாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களை பயன்படுத்தும்போது சார்ஜர், பேட்டரி உள்ளிட்டவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம் என இந்த சம்பவம் மீண்டும் எச்சரிக்கிறது.

Read Previous

மாணவர் அமுதன் கொலை: சீமான் கடும் கண்டனம்!

Read Next

திமுக நிர்வாகி எம்.எம். அப்துல்லாவின் தாயார் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular