மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் அவரது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய நிலையில், தற்போது மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




