இளைஞர்களின் கடன் சுமை அதிகரிப்பு! RBI எச்சரிக்கை!

 

 

இந்தியாவில் இளம் தலைமுறையினர் கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை அதிகளவில் பயன்படுத்தி, வருமானத்தை விட அதிகமான கடன் சுமையில் சிக்கிக் கொள்ளும் நிலை குறித்து RBI கவலை தெரிவித்துள்ளது. பைசாபசார் மற்றும் டிரான்ஸ்யூனியன் சிபில் ஆய்வுகளின்படி, இந்தியாவில் கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை ரூ.3.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக கிரெடிட் கார்டு பெறுபவர்களில் சுமார் 50% பேர் இளைஞர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களை எளிதாக பெறுவதால், வருமானத்தை கருத்தில் கொள்ளாமல் அதிகமாக கடன் வாங்கும் பழக்கம் உருவாகிறதா என்பது குறித்து RBI கவனம் செலுத்தி வருகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிட்டு, பொறுப்புடன் கடன் பெறுவது அவசியம் என நிதி நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Read Previous

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகம்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Read Next

சுதந்திர தினம்: பாம்பன் ரயில் பாலத்தில் பலத்த பாதுகாப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular