ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு புத்தகம்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

 

 

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளையொட்டி, அவரது திரையுலக பயணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பதிவு செய்யும் ‘Empress: The Definitive Biography of Sridevi’ என்ற வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை, சாதனைகள் மற்றும் திரையுலகப் பயணத்தை விரிவாக பதிவு செய்யும் வகையில் இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதேவியின் நினைவுகளை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு வரும் இந்த புத்தகம், அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Read Previous

திமுக நிர்வாகி எம்.எம். அப்துல்லாவின் தாயார் காலமானார்!

Read Next

இளைஞர்களின் கடன் சுமை அதிகரிப்பு! RBI எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular