சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் பாலத்தின் தூண்கள், ரயில் தண்டவாளங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தில் மீனவர்கள் அமர்ந்து மீன்பிடிக்கக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் பாலத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




