திமுக மாவட்டங்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்கிறதா? பரபரக்கும் தகவல்!

 

 

சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட அமைப்புகளிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

 

தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சி தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 

தற்போது திமுகவில் 77 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கையை 100 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வடக்கு, தெற்கு, மத்திய உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாவட்டங்கள் சிலவற்றை மேலும் பிரிக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த மாற்றங்கள் மூலம் கட்சியின் நிர்வாகத்தை அடிமட்ட அளவில் வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது புதிய மாவட்ட அமைப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

Read Previous

“பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?” – வேல்முருகன் கேள்வி!

Read Next

“விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே” – இபிஎஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular