“எம்.ஜி.ஆரின் ஆவி சும்மா விடாது” – பொன்னையன் கடும் விமர்சனம்!

 

 

மறைந்த அதிமுக முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை ஏமாற்றி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சொத்துகளை சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

வேலுமணியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த பொன்னையன், எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி அரசியலில் உயர்ந்தவர்கள் அவருக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

 

மேலும், எம்.ஜி.ஆரின் ஆவி வேலுமணியை நிச்சயம் சும்மா விடாது என்றும் பொன்னையன் கடுமையாக சாடியுள்ளார். அவரது இந்த கருத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் குறித்தும் அவர் விமர்சனம் செய்துள்ளார். அந்தக் கட்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ‘லீஸுக்கு’ சென்றுள்ளதாகவும், 6 அல்லது 11 மாத காலம் முடிந்ததும் மீண்டும் உரிய உரிமையாளரிடமே வந்து சேரும் என்றும் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

Read Previous

“வைகோ தவெக பக்கம் சென்றபோதே அரசியல் எதிர்காலம் முடிந்தது” – லியோனி!

Read Next

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular