கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு காவல்துறை அனுமதி மறுத்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறையின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது, கோவை இந்தியாவில் தானே உள்ளது என்றும், தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காவல்துறையின் நடவடிக்கையில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசியக் கொடியை ஏந்தி பேரணி நடத்துவது தவறான செயலா என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.




