மலைப்பகுதி கிராமங்களுக்கு டிரோனில் அஞ்சல்! அசாம், இமாச்சலில் 150 வழித்தடங்கள்!

 

 

கடினமான நிலப்பரப்பு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு அஞ்சல்களை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில், டிரோன் மூலம் அஞ்சல் விநியோக சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள தொலைதூரப் பகுதிகளிலும் அஞ்சல் சேவையை தடையின்றி வழங்க இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு அஞ்சல் சேவை கிடைப்பதில் ஏற்படும் தாமதங்கள் குறைய வாய்ப்புள்ளது.

 

மேலும், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்படும் நேரங்களிலும், டிரோன்கள் மூலம் அஞ்சல்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

 

இதற்காக அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் முழுவதும் மொத்தம் 150 டிரோன் வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி தொலைதூர மக்களுக்கான அஞ்சல் சேவையை மேலும் எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

ஆக.15 அல்ல.. ஆக.16-ல் சுதந்திர தினம் கொண்டாடும் பீகார் கிராம மக்கள்!

Read Next

வீட்டிலேயே தோட்டம் அமைக்கப் போறீங்களா? இந்த விஷயங்களை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular