உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பண உதவி? தேர்தலை குறிவைக்கும் புதிய திட்டங்கள்!

 

 

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெண் வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சிகள் பல்வேறு திட்டங்களை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, பெண்களுக்கு ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.

 

அதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.40,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரு முக்கிய கட்சிகளும் பெண்களை மையமாகக் கொண்டு அறிவிக்க உள்ளதாக கூறப்படும் இந்த நிதியுதவித் திட்டங்கள் உத்தரப் பிரதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

Read Next

ஆயுஷ்மான் கார்டு இனி வாட்ஸ்ஆப்பிலேயே பதிவிறக்கம் செய்யலாம்! எப்படி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular