தேசியக் கொடியேற்றியபோது திடீர் மயக்கம்! விழாவில் பரபரப்பு!

Oplus_16908288

 

 

ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி, திருப்பதி காவல் அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றார்.

 

தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் அமைச்சருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, அவர் ஒரு பக்கமாக சாய்ந்தார். உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை தாங்கிப் பிடித்து கீழே விழாமல் தடுத்தனர்.

 

தொடர்ந்து அமைச்சருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு உடல்நிலை தேறிய அமைச்சர், மீண்டும் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.

Read Previous

திருவொற்றியூரில் மாணவர் கொலை: “சமூக விரோதிகளுக்கு பயமில்லை” – உதயநிதி சாடல்!

Read Next

24 மணி நேரத்தில் தடை நீக்கம் ஏன்? “பயமா? பதற்றமா? டீலிங்கா?” – இபிஎஸ் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular