மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டம் மெல்காட் பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆசிரமப் பள்ளி விடுதியில் பேய் இருப்பதாக வதந்தி பரவியதால், சுமார் 300 மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களுக்குச் சென்றுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு 16 மாணவிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் அசாதாரண நிகழ்வுகள் குறித்து தகவல் பரவியதைத் தொடர்ந்து, கிராம மக்களிடையே பேய் பற்றிய வதந்தி வேகமாக பரவியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று மாணவிகளை பரிசோதித்தனர். மாணவிகளிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் மனப்பதற்றம் காரணமாக இருக்கலாம் என சுகாதாரத்துறை குழுவினர் தெரிவித்ததுடன், அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகின்றனர்.
இதற்கிடையே, புதிய விடுதிக்கு அருகில் இருந்த மரம் வெட்டப்பட்ட பின்னரே இதுபோன்ற வதந்திகள் பரவியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.




