கோவை மாணவர் கொலை விவகாரம்: “சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம்” – இபிஎஸ்!

 

 

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர் கொலை செய்யப்பட்டதற்கு போதைப்பொருள் புழக்கம் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

 

மேலும், தமிழக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே இந்த அரசின் சாதனை” என விமர்சனம் செய்தார். முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் ஏமாற்றத்தில் இருப்பதாகவும் கூறினார்.

 

காவிரி பிரச்னை குறித்து அரசுக்கு போதிய புரிதல் இல்லை என குற்றம்சாட்டிய அவர், மக்கள் பிரச்னைகளுக்காக தவெக இதுவரை போராடியதே இல்லை என்றும் விமர்சித்தார்.

Read Previous

ஆந்திராவில் 6,534 ஆசிரியர் பணியிடங்கள்! மாதம் ரூ.12,500 வரை ஊதியம்!

Read Next

“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular