இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மக்களிடையே உரையாற்றிய முதல்வர் விஜய், தேர்தலில் வாக்களித்து புதிய ஆட்சி அமைந்ததும் மக்கள் தங்களது கடமை முடிந்துவிட்டதாக கருதக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
மேலும், மக்கள் எப்போதும் அரசுடன் இணைந்திருந்து, அரசு சிறப்பாக செயல்படுவதற்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாநிலத்தின் வளர்ச்சியை மேலும் சிறப்பாக கொண்டு செல்ல முடியும் என முதல்வர் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார்.




