நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

 

 

முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் வகையிலான பேச்சுகள் தொடர்ந்து வருவது கண்டிக்கத்தக்கது என விமர்சித்தார்.

 

மேலும், அரசியல் தலைவர்கள் கண்ணியமான முறையில் தங்களது கருத்துகளை தெரிவித்து, தமிழக அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது இதுபோன்ற மூன்றாந்தர அரசியல் அல்ல என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Read Previous

“வாக்களித்ததுடன் மக்கள் கடமை முடிந்துவிடாது!” – முதல்வர் விஜய் வேண்டுகோள்!

Read Next

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular