காலை உணவு திட்ட பெயர் விவகாரம்: தவெக அரசை விமர்சித்த எ.வ.வேலு!

நாங்கள் செயல்படுத்திய திட்டத்திற்கு நீங்கள் பெயர் சூட்டுவது, ‘அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே’ என்பது போல் உள்ளது என திமுக எம்எல்ஏ எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

காலை உணவு திட்டத்திற்கு ‘மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம்’ என பெயர் வைக்க பரிந்துரைக்கப்பட்டபோது, அதனை அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும், ‘முதலமைச்சர் காலை உணவு திட்டம்’ என்றே பெயர் சூட்டியதாகவும் அவர் கூறினார்.

மேலும், காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரை வைப்பதற்கு பதிலாக, தவெக அரசு புதிதாக கொண்டு வரும் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அவரது பெயரை வைக்கலாம் என எ.வ.வேலு தெரிவித்தார்.

தாங்கள் செயல்படுத்திய திட்டத்திற்கு வேறு பெயர் சூட்டுவதற்கு பதிலாக, புதிய திட்டங்களுக்கு தலைவர்களின் பெயர்களை வைக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

Read Previous

ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

Read Next

தவெக – திமுக இடையே காரசார விவாதம்: பெரியார் நூலகம் குறித்து கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular