மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள ‘மஹஃபில்’ உணவகத்தில் முஸ்கான் என்ற இளம் பெண் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.
அதே உணவகத்தில் பவனும் பணியாற்றி வந்த நிலையில், உணவு சமைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பவன் சரியாக வேலை செய்யவில்லை என முஸ்கான் மேலாளரிடம் புகார் அளித்ததால், அவர் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து உணவகத்திற்குள் வைத்து முஸ்கானை பவன் கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பவனை கைது செய்ய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
MP के जबलपुर में महफिल रेस्टोरेंट के अंदर एक युवती की चाकू गोदकर हत्या कर दी गई थी – CCTV देखिए
मुस्कान की हत्या साथी युवक पवन ने कर दी थी। खाना बनाने को लेकर विवाद हुआ था। मुस्कान ने पवन की कंप्लेंट मैनेजर से कर दी थी तो पवन बौखला गया था। pic.twitter.com/3tNQ5DKIOX
— Madan Mohan Soni (@madanmohansoni) August 18, 2026




