பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறல்: நடத்துநருக்கு பயணிகள் தர்மஅடி!

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள், பேருந்து வந்ததும் அதில் ஏறினர். அப்போது பேருந்தில் இருந்த பெண் ஒருவரிடம் நடத்துநர் தவறான எண்ணத்துடன் அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பெண்ணை தவறாக தொட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படும் நடத்துநரின் நடவடிக்கையை பேருந்தில் இருந்த சில பயணிகள் கவனித்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக நடத்துநரை தட்டிக்கேட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், நடத்துநரை பேருந்திலிருந்து வெளியே இழுத்து வந்து சாலையில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களிடம் அத்துமீறும் நபர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read Previous

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்: 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

Read Next

உணவகத்தில் பெண் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை: சக ஊழியருக்கு போலீஸ் வலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular