கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் அம்மாநில வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“கர்நாடக வனத்துறை விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் அளித்த பதிலும், கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தையே பிரதிபலிக்கும் வகையில் இருந்ததாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தொடர்பான இந்த விவகாரத்தில் தமிழக அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.




