சட்டப்பேரவையில் இன்று முக்கிய விவாதம்! அமைச்சர்கள் வெளியிடும் அறிவிப்புகள் மீது எதிர்பார்ப்பு!

 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19) ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

 

இதில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது தொகுதிகள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர். குடிநீர், சாலை வசதி, ஊரக வளர்ச்சி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேச உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

 

தொடர்ந்து, உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ராஜேஷ்குமார் பதிலளிக்க உள்ளனர். மேலும், தங்களது துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட உள்ளதால், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Read Next

குடும்பத் தகராறில் 7 பேர் எரித்துக்கொலை! 3 பேருக்கு 8 ஆயுள் தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular