நாடு முழுவதும் மருத்துவர்கள் பணியாற்ற புதிய நடைமுறை! தேசிய அளவில் தனி அடையாள எண்!

 

 

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளின்படி, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யும் மருத்துவர்களுக்கு இனி தேசிய அளவில் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது.

 

இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மருத்துவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமின்றி, இந்தியா முழுவதும் மருத்துவப் பணியை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

 

ஏற்கனவே மருத்துவப் பதிவு செய்துள்ள மருத்துவர்களும், ஆணையம் அறிவிக்கும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையதளத்தில் தங்களது விவரங்களை இலவசமாக புதுப்பித்து தேசிய அடையாள எண்ணைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

நெல்லையில் பேப்பர் மில்லில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்!

Read Next

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular