தென்காசியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு! இலங்கைத் தமிழர் முகாமில் மேலும் ஒரு பெண் உயிரிழப்பு!

 

 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

போகநல்லூர் அருகே உள்ள முகாமில் கடந்த ஒரு மாதமாக டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

 

ஏற்கனவே 13 வயது சிறுமி டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், தற்போது நர்மளா (27) என்பவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முகாமில் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

“தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் உரிமை முதலமைச்சர் விஜய்க்கு உண்டு” – வன்னி அரசு!

Read Next

எம்எல்ஏக்களுக்கு கார், மாதம் ரூ.1 லட்சம் சலுகை? விஜய் அறிவிப்புக்கு மக்கள் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular