அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி ஆன்லைனில் போலியான இனிப்புகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், அமேசான் நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை நிறுவனங்கள் முறையாக கண்காணிக்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்களை வெறும் இடைத்தரகர்கள் எனக் கூறி, விற்பனையில் ஏற்படும் முறைகேடுகளுக்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் அமேசானுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.




