அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில், மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்றும், இதற்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளக் கூடாது என்றும், தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543-ஐ அதிகரிக்கக் கூடாது என்றும் எம்.பி.க்கள் கூட்டம் மற்றும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் முன்வைத்துள்ள இந்தக் கருத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.




