மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

 

 

பூரண மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில், கள்ளச்சாராயம் குடித்ததாக கூறப்படும் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாவ்நகர் மாவட்டம் கார்கடி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்ததாகக் கூறப்படும் மேலும் 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவத்திற்கான காரணம் மற்றும் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்ட விதம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலத்திலேயே கள்ளச்சாராயம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

“மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது!” – தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் விஜய் வலியுறுத்தல்!

Read Next

ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular