ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

 

 

டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கையிருப்பில் உள்ள 7 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை பாலிஷ் செய்து தரமான அரிசியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

மேலும், ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை ஹீட்டர் மூலம் உலர்த்தி கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படும் என்றும், பொதுமக்களுக்கு தரமான அரிசி கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

Read Previous

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு!

Read Next

“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular