“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

 

 

சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், பொதுமக்களை சந்திக்கும் போது, ரேஷன் அரிசியை சாதமாக சமைத்து சாப்பிட முடியவில்லை என்றும், இட்லி, தோசை தயாரிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதாகவும் பலர் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

 

ரேஷன் அரிசியின் தரம் குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை அமைச்சர் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டிய நிலையில், அவரது பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே, “இட்லியும் தோசையும் உணவுப் பண்டங்கள் இல்லையா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி, அமைச்சரின் கருத்தை விமர்சித்து வருகின்றனர்.

 

ரேஷன் அரிசியின் தரம் தொடர்பான விவகாரம் ஏற்கனவே பேசுபொருளாக உள்ள நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு மேலும் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

ரேஷன் கடைகளில் தரமான அரிசி எப்போது? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

Read Next

எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார், ரூ.1 லட்சம் படி? சீமான் கடும் எதிர்ப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular