எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார், ரூ.1 லட்சம் படி? சீமான் கடும் எதிர்ப்பு!

 

 

மக்கள் நலத்திட்டங்கள் பல நிலுவையில் உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு இலவச கார் மற்றும் மாதந்தோறும் ரூ.1 லட்சம் கூடுதல் படி வழங்கும் அரசின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களிடம் சொந்தமாக கார்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்காக மக்கள் வரிப்பணத்தை செலவிடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில், இதுபோன்ற கூடுதல் செலவுகள் தேவையற்றது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

 

எனவே, எம்.எல்.ஏ.க்களுக்கான இதுபோன்ற வீண் செலவுகளை கைவிட்டு, அந்த நிதியை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

“ரேஷன் அரிசியை இட்லி, தோசைக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்” – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

Read Next

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பாதிரியாருக்கு மரண தண்டனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular