பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த், ஹரித்வாரில் உள்ள சிவன் கோயில் பகுதியில் நண்பருடன் இணைந்து பிச்சைக்காரர் வேடமிட்டு ஒரு பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்.
அழுக்கு ஆடைகளை அணிந்து, கழுத்தில் QR கோடு தொங்கவிட்டபடி 8 மணி நேரம் பிச்சை எடுத்ததில் சுமார் ரூ.4,000 கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருமானத்தை அடிப்படையாக வைத்து கணக்கிட்டபோது, ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பிச்சை எடுப்பது உடல் மற்றும் மன ரீதியாக மிகவும் சிரமமான அனுபவமாக இருந்ததாகவும், நீண்ட நேரம் ஈடுபட்டதால் கடும் சோர்வு ஏற்பட்டதாகவும் புருஷோத்தம் விஷிஸ்த் தெரிவித்துள்ளார்.




